தொழிலாளருக்காய் ஒலித்த பெண் குரல் ஓய்ந்தது!

இலங்கையில் தொழிலாளருக்காய் நீண்டகாலம் ஒலித்த தொழிற்சங்கவாதியான அநுலா ரத்நாயக்கவின் குரல் ஓய்ந்தது.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தேசிய தொழிலாளர் சங்கத்தின் அங்கத்தவராக 1979ம் ஆண்டு தன்னை இணைத்துக்கொண்ட அநுலா ரத்நாயக்க பின்னர் செயற்குழு அங்கத்தவராகவும் இணைந்து செயற்பட்டார்.

அநுலா, தேசிய ஊழியர் சங்கத்தின் தாய் சங்கத்தின் செயற்குழு சபையின் அங்கத்தவராகவும் சுதந்திர வர்த்த வலயத்தின் பிரகதி சங்கத்தின் ஏற்பாட்டாளராகவும் செயற்பட்டார்.

2000மாம் ஆண்டு தொடக்கம் இன்று வரை NUMS/NUSS ஆகிய சங்கங்களில் ஏற்பாட்டாளராக செயற்பட்ட அவர், கல்வி தொடர்பான திட்டங்களை ஏற்பாடு செய்வதில் முன்னின்று திறமையாக செயற்பட்ட ஒருவராவார்.

ஒத்துழைப்பு மத்திய நிலையத்துடன் இணைந்து நீண்ட கால தொழிற்சங்க செயற்பாடுகளை ஏற்பாடு செய்தல் மற்றும் அதற்கான ஒத்துழைப்பு வழங்குவதிலும் முன்னின்று உழைத்த அவர் நிகழ்வுகளை தொகுத்து வழங்குவதிலும் அக்கறை கொண்டவராவார்.

வெடபிம, வேலைத்தளம் இணையதளங்கள் ஏற்பாடு செய்திருந்த தொடர் கலந்துரையாடல்களில் தொடர்ச்சியாக பங்குபற்றிய அவர் நேற்று முன்தினம் (07) திம்பிரிகஸ்யாய ஜானகி ஹோட்டலில் நடைபெற்ற எமது 6ஆவது கலந்துரையாடலிலும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்று திடீரென நோய்வாய்ப்பட்ட அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பயனளிக்காது மரணத்தைத் தழுவினார்.

தொழிற்சங்கங்களில் பெண் செயற்பாட்டாளர்கள் மிகவும் அரிதாக இருந்த காலப்பகுதியில் மிக சிறந்த பெண் தொழிற்சங்கவாதியாக இணைந்து செயற்பட்ட அநுலா, நீண்ட காலம் தொழிற்சங்க செயற்பாட்டாளாக, தொழிலாளர் உரிமைகளுக்காக குரல்கொடுத்துள்ளார்.  அக்குரல் இன்று ஓய்ந்தது.

அவருடைய ஆன்மா சாந்தியடைய நாம் பிரார்த்திப்போம்!

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435