தொழிற்சங்கத்தினருக்கு எதிராக செயற்பட ரூபவாஹினி அதிகாரிகள் திட்டம்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் இடம்பெறும் ஊழல் – மோசடிகளுக்கு எதிராக தற்போது செயற்பட்டுக்கொண்டிருக்கும் தொழிற்சங்கத் தலைவர்களை நடவடிக்கைகளை முடக்குவதற்கு நிர்வாக அதிகாரிகளினால் திட்டமிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 பிரதான காரணங்களை அடிப்படையாகக்கொண்டு, தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பினால், தமது பணியாளர்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கை ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக, தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தவிசாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோர், குறித்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு தலைமைத்துவம் வழங்கிய தொழிற்சங்கத் தலைவர்களை செயற்பாடுகளை முடக்குவதற்காக திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிமூலம்: அருண

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435