தொழிற்சங்கங்களை பயங்கரவாத வரையறைக்குள் உட்படுத்தும் CTA

 

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் CTA ஊடாக தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகள் அனைத்தையும் பயங்கரவாத வரையறைக்குள் உட்படுத்தி அவற்றை அச்சுறுத்தவும் வழி செய்யப்பட்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

செய்தி ஊடக தலைமை ஆசிரியர்களை கொழும்பிலுள்ள தமது அலுவலகத்தில் மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,

புதிதாக முன்வைக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மிகவும் பாரதூரமானது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது அவசரகால சட்ட பிரகடனத்தின் ஊடாக வலுப்பெறுகின்ற பயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துகளை, நிரந்தமாக சாதாரண சட்டமாக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இந்தச் சட்டமூலத்தின் ஊடாக ஊடகங்களின் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்த சரத்துகள் உள்வாங்கப்பட்டுள்ளன.

அத்துடன், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகள் அனைத்தையும் பயங்கரவாத வரையறைக்குள் உட்படுத்தி அவற்றை அச்சுறுத்தவும் வழி செய்யப்பட்டிருக்கின்றன. இதுதோற்கடிக்கப்பட வேண்டும்.

இதுகுறித்து ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

வழிமூலம்: சூரியன் செய்திகள்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435