தொடரும் பொது சுகாதார பரிசோதகர் போராட்டம்

வடமேல் மாகாண பொது சுகாதார பரிசோதகர் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் இன்றும் (09) தொடர்கிறது.

பதவியுயர்வு வழங்காமை, போக்குவரத்துச் செலவுகளை வழங்காமை, சேவை பாதுகாப்புக் கொடுப்பனவு வழங்காமை உட்டபட பல பிரச்சினைகளை தீர்க்குமாறு வலியுறுத்தி வடமேல் மாகாண பொது சுகாதார பரிசோதகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் மஹேந்ர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

புத்தளம், குருணாகலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு ஒழிப்புப் பணிகள், தண்ணீர் மாதிரி பரிசோதனை, உணவு பரிசோதனை சுற்றிவளைப்புகள், பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குதல் போன்ற பொறுப்புக்களை மாகாண பொது சுகாதார பரிசோதகர்கள் நிறுத்தியுள்ளனர்.

இப்போராட்டமானது கடந்த வியாழக்கிழமை தொடக்கம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மஹேந்ர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

மூலம் – News First

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435