தொடரும் பல்கலை. கல்விசாரா ஊழியர் போராட்டம்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் அனைத்து பல்கலைக்கழங்களிலும் முன்னெடுத்துள்ள பணி பகிஷ்கரிப்பு தொடர்ந்து 27வது நாளாக ஈடுபட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.எம். நௌபர் தெரிவித்தார்.

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளன ஏற்பாட்டில் அனைத்துப் பல்கலைக் கழங்கங்களிலும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊழியர்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பணிப்புரியும் அனைத்து ஊழியர்களும் ஒன்றிணைந்து கடந்த செப்டம்பர் மாதம் 10ம் திகதி தொடக்கம் தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை அதிகரிக்க தேவையான சுற்றுநிரூபத்தை வெளியிடல், 45 வீத மாதாந்த இழப்பீட்டுக் கொடுப்பனவை 75 வீதம் வரை உயர்த்துவதற்கு நடவடிக்கை, பல்கலைக்கழக முறைமைக்கு செலுத்தப்படுகின்ற ஓய்வூதியத்தை பயனுள்ளதாக தயாரித்துக் கொள்ளல், நிறுத்திவைக்கப்பட்டுள்ள மொழித் தேர்ச்சிக் கொடுப்பனவை செலுத்துவதற்கான சுற்றுநிரூபத்தை வெளியிடல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே தொடர்ச்சியான பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார். எமது கோரிக்கைகள் தொடர்பாக உயர் கல்வி அமைச்சர், அமைச்சின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர்க்கிடையில் கடந்த வாரம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து சில கோரிக்கைகளுக்கு உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றும் திறைசேரியினால் இதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்படவில்லையெனவும் தெரிவித்தார்.

சம்பள ஏற்றத்தாழ்வை நிவர்த்தி செய்வது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்படும் பட்சத்தில் எமது பணிப் பகிஷ்கரிப்பினை கைவிடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தினகரன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435