தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பாடசாலைகளுக்கான அறிவித்தல்

தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்களும், பிரதி அதிபர்களும் எதிர்வரும் 28ஆம், 29ஆம், 30ஆம், 31ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தேர்தல் தொடர்பில் பாடசாலைகளை ஆயத்தப்படுத்துவதற்கும், அது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்குவதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றின் ஊடாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு, உதவி ஆணையாளர்களுடன் கலந்துரையாடி, தேர்தல் பணிகளுக்காக பாடசாலைகளில் வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் பாடாசலைகளின் அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435