தேர்தல் கடமை: ஆசிரியர்களுக்கான கடிதங்கள் தொடர்பாக

தேர்தல் கடமைகளில் ஈடுடவுள்ள ஆசிரியர்களுக்கான கடிதங்களை கையளிக்கும் பொறுப்பு பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழங்கப்படுகின்றது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

27 ஆம் திகதி (இன்று) முதல் 11ம் 12ம் 13ம் தரங்களுக்கு பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுகின்றன. அந்த தரங்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மாத்திரமே பாடசாலைக்கு செல்வர். வாக்களிப்பு நிலையத்தில் பணியாற்றுபவர்களில் நூற்றுக்கு 50 வீதத்திற்கும் அதிகமானவர்கள் ஆசிரியர்களாக உள்ளனர்.

அரச துறையில் பணியாற்றுபவர்களில் நூற்றுக்கு 80 வீதமானவர்கள் பெண்களாவர்.

தேர்தல் கடமைகளில் ஈடுடவுள்ள ஆசிரியர்களுக்கு இந்த முறை அவர்களின் வீடுகளுக்கு ஒரு கடிதமும், பாடசாலைக்கு ஒரு கடிதமும் அனுப்பி வைக்கப்படுகின்றது.

ஆசியர்களுக்கான கடிதங்களை கையளிக்கும் பொறுப்பு அதிபர்களுக்கு வழங்கப்படுகின்றது. 27 ஆம் திகதியின் பின்னர் பாடசாலைகளுக்கு கிடைக்கும் கடிதங்களை 31ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரரோ ஆசிரியர்களுக்கு கையளிக்கும் பொறுப்பு பாடசாலைகளின் அதிபர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது என தேர்தல்கள் ஆணைக்குழு வின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435