தேயிலைத் தோட்ட தொழிலாளர் பிரச்சினையை கண்டறிய குழு!

தேயிலைத் துறையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட தேயிலைத் துறை சார்ந்த குறுங்கால மற்றும் நெடுங்கால பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளை முன்மொழிவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.

தேயிலைத் துறையி்ல் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைகள் தொடர்பில் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதியினால் இந்த குழு நியமிக்கப்பட்டது.

ஜனாதிபதி ஆளணி பிரதானி எச்.எம்.பீ.ஹிட்டிசேகர, பெருந்தோட்ட கைத்தொழிற்துறை அமைச்சின் செயலாளர் ஜே.ஏ.ரஞ்சித், தொழில் அமைச்சின் செயலாளர் ஆர்.பி.ஆர்.ராஜபக்ஷ, திறைசேரி செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, இலங்கை தேயிலை சபையின் தலைவர் டபிள்யு.எல்.பி.விஜேவர்தன, தொழில் ஆணையாளர் நாயகம் ஜே.விமலவீர, சிறுதேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஆகியோரும் இலங்கை பெருந்தோட்ட சங்கம், இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம், இலங்கை தேயிலை தரகர்கள் சங்கம், தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஆகியவற்றை சார்ந்த ஒரு பிரதிநிதி வீதம் இக்குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தேயிலைத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குதல், அதன் அபிவிருத்திக்காக மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகளை செயற்படுத்துதல் மற்றும் இத்துறையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் நலன்புரி நடவடிக்கைகளை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஒரு மாத காலத்திற்குள் குறித்த குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

தேயிலைத் துறையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் காணப்படும் தடைகள் மற்றும் தேயிலை ஏற்றுமதியில் தோன்றியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக இந்த கலந்துரையாடலின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

 

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435