தேசிய பாடசாலை இடமாற்றம் இடைநிறுத்தம்

தேசிய பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இடமாற்றம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தவணை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்குவதால் கல்வி பாதிக்கப்படும் என்று பல அதிபர்கள் கோரியதையடுத்து இவ்விடமாற்றம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, இவ்வருடத்தில் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்குவது தொடர்பான விபரங்கள் விரைவில் அறிவிகப்படும். ஆனால் இடமாற்றச்சபையின் சந்திப்பு நிறுத்தப்படாது. எதிர்காலத்தில் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான செயலி (App) அறிமுகப்படுத்த கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனூடாக ஆசிரியர்கள் இலகுவாகவும் முறையாகவும் தாமாகவே இணையதளமூடாக தமது இடமாற்றம் தொடர்பான உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435