தெற்கு கனிஷ்ட பிரிவு ஊழியர்கள் சுகயீன விடுப்புப் போராட்டத்தில்

தெற்கு வைத்தியசாலைகளில் பணியாற்றும் கனிஷ்ட பிரிவு ஊழியர்கள் இன்றும (23) நாளையும் (24) சுகயீன விடுப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.

மேலதிக கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிராக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை சுகாதார சேவைகள் சங்கத்தின் செயலாளர் சங்கைக்குரிய டெம்பிட்டியே சுகதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

தென் மாகாண ஆளுநருடன் நேற்று நடத்தப்பட்ட பேச்சுவார்தை தோல்வியடைந்ததையடுத்து இத்தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு மாதங்களுக்கான மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435