தமிழ் மொழி ஆசிரியர் நியமனம் இடைநிறுத்தம்

தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சினால் வழங்கப்படவிருந்த மொழி ஆசிரியர் நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

தமிழ் மொழி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (05) குறித்த அமைச்சின் கீழியங்கும் தேசிய மொழிகள் பயிற்சி நிறுவனத்தில், அமைச்சர் மனே கணேசன் தலைமையில் நடைபெறவிருந்த நிலையில் தேர்தல் ஆணைக்குழுவின் தலையீட்டினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நியமனம் வழங்கல் நிகழ்வு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு மற்றும் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்ததையடுத்து அவ்விடத்திற்கு உடனடியாக விரைந்த அதிகாரிகள் அந்நிகழ்வை உடனடியாக தடுத்து நிறுத்தினர் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனக்க வெலிவத்த தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழி ஆசிரியர்கள் 400 பேருக்கு நியமனம் வழங்க அமைச்சர் மனோ கணேசன் ஏற்பாடு செய்திருந்தார். இவ்விடயம் தொடர்பில் எமக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக ஹோமாகம மற்றும் மஹரமக பிரதேசசபை உறுப்பினர்கள் நியமனம் வழங்கப்படவிருந்த இடத்திற்கு விரைந்து, நடைபெறவிருந்த சட்டவிரோத செயற்பாடு தொடர்பில் பொலிஸார் மற்றும் தேர்தல் ஆணைக்குழு என்பவற்றுக்கு தெரியப்படுத்தினோம். அவ்விடத்திற்கு உடனடியாக விரைந்த அதிகாரிகள் இச்செயற்பாட்டை உடனடியாக தடுத்து நிறுத்தினர். விடுமுறை தினமொன்றில் அமைச்சர் மேற்கொண்ட இச்செயற்பாடு மிகவும் தவறானது. அது மட்டுமன்றி தேர்தல் ஒன்றை அறிவித்திருந்தநிலையில் அரசின் பிரபல அமைச்சர் ஒருவரின் இத்தகைய செயற்பாடு சட்டவிரோதமானது.
நுவரெலியா, பதுடளை, ஹப்புத்தளை, மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 400 பேர் நியமனங்களை பெற வருகைத் தந்திருந்தனர். இச்சட்டவிரோத செயற்பாட்டுக்கு எதிராக பொலிஸாரும் தேர்தல் ஆணைக்குழுவும் உடனடியாக நடவடிக்கை எடுத்தமை மகிழ்ச்சிக்குரியது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435