தபால்மூல வாக்காளர்களுக்கு இன்று இறுதி வாய்ப்பு

 

கடந்த 4 தினங்களில் தபால்;மூல வாக்களிப்பின்போது, வாக்கை பதிவுசெய்ய முடியாமல்போன தபால்மூல வாக்காளர்கள் இன்று வாக்களிப்பில் ஈடுபட இறுதி சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

தபால்மூல வாக்கை பதிவு செய்யாத அரச ஊழியர்கள், தமது பிரதேசங்களில் உள்ள மாவட்ட தேர்தல் காரியாலங்களில் வாக்கை பதிவுசெய்ய முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளும் இன்றைய தினம் தங்களது தபால்;மூல வாக்கை இன்று பதிவுசெய்ய உள்ளனர்.

அனைத்து அரச ஊழியர்களுக்கும் கடந்த 31 ஆம் மற்றும் முதலாம் திகதிகளில் தபால்மூல வாக்கை பதிவுசெய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இதேநேரம், பொலிஸாரும் மாவட்ட மற்றும் தேர்தல் காரியாலயங்களில் பணியாற்றும் அரச ஊழியர்கள் தங்களது தபால்;மூல வாக்கை பதிவுசெய்வதற்கு, கடந்த 4 ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த சந்தர்ப்பங்களில் வாக்கை பதிவுசெய்ய முடியாமல்போனவர்களுக்கு இன்று தபால்மூல வாக்காளர்கள் இன்று வாக்குப் பதிவை மேற்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேநேரம், தேர்தல் கடமைகளுக்கு ஏற்றவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435