தகைமையுடைவர்கள் ஆசிரியர் சேவையில் இணைக்க வேண்டும்

உரிய தமைய பூர்த்தி செய்துகொண்டுள்ள ஆசிரியர் உதவியாளர்கள், ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஆசிரிய உதவியாளர் நியமனம் தொடர்பில் பிரேரணையொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிலையில், குறித்த ஆசிரியர் உதவியாளர்கள் தகமைகளை பூர்த்தி செய்துள்ள போதிலும் முழுமையான சம்பளத்தைப் ​பெற்றுக்கொள்ளவில்லை என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர்கள் நியமனங்களை நல்லாட்சி அரசாங்கத்தினால் முறையாக வழங்க முடியாமல் போயுள்ளதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் சுட்டிக்காட்டினார்.

மூலம் – கெபிடல் நியுஸ்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435