ட்ரக்குக்குள் மறைந்திருந்த சட்டவிரோத 18பேர் UAEயில் கைது

சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த பெண்கள் உட்பட 18 பேரை ட்ரக் வண்டியில் ஒழிந்திருந்த வேளையில் அபுதாபி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் அல் அயின் நகரில் உள்ள காட்டம் அல் ஷாக்கல் துறைமுகத்தில் ட்ரக் வண்டியில் ஒழிந்திருந்த சந்தர்ப்பத்திலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அபுதாபி சுங்க அதிகாரிகளுடன் இணைந்து குறித்த துறைமுகப்பகுதியில் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போது இந்த 18 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இணைந்து ஒத்துழைப்புடன் செயற்பட்டமையினாலேயே இந்நபர்கள் கைது செய்யப்பட்டனர். நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயற்படும் எந்த நபரையும் நாம் பொறுத்துக்கொள்ள முடியாது.

நாட்டில் ஏற்படும் பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் தாக்குதல்களுக்கு இத்தகைய ஊடுறுவல்களே காரணமாக அமைந்துள்ளது. இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை எவ்வித பாரபட்சமுமின்றி வேரோடு இல்லாதொழிக்கவேண்டும் என பொலிஸார் தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435