டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு

தேசிய கல்வியில் கல்லூரிகளில் பயிற்சியினை வெற்றிகரமாக பூர்த்தி செய்த தேசிய பயிலுநர் டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 30.08.2019 அன்று அலரி மாளிகையில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் கல்வி இராஜங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களின் பங்குபற்றதலோடு நடைபெறவுள்ளது.

இதனடிப்படையில் பயிலுநர் டிப்ளோமாதாரிகளை இணைப்பு செய்யவிருக்கும் பாடசாலையினை தீர்மானிப்பதற்கான விசேட நிகழ்வு ஒன்று எதிர்வரும் 18.08.2019ம் திகதி பி.ப 2.30 மணிக்கு மஹரகம தேசிய கல்வியில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறும்.

இல1.914 மற்றும் 2015.05.08 திகதயுடைய இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் வர்த்தமானி அறிக்கை மற்றும் இல 1885/38 மற்றும் 2014.10.23 ஆம் திகதியுடைய இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பின் விதிமுறைகளுக்கமைய அன்றைய தினம் கட்சிப்படுத்தப்படும் பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களை அடிப்படையாக கொண்டு பயிலுநர் டிப்ளோமாதாரிகள் நிலைப்படுத்தபடுத்தப்படுவார்கள்.

UNP Jaffna News/ வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435