சுமூகமாக நிறைவுற்ற ரயிவே போராட்டம்?

ரயில்வே திணைக்கள பிரதிநிதிகளுக்கும் போக்குவரத்துதுறை அமைச்சருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்தையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டையடுத்து வேலைநிறுத்தப்போராட்டம் நேற்று (01) மாலையுடன் முடிவுக்கு வந்தது.

நேற்று முன்தினம் (03) மேற்கொள்ளப்பட்ட போராட்டமே இவ்வாறு முடிவுக்கு வந்துள்ளது.

மதுபோதையில் இருந்த தொழிற்சங்க உறுப்பினர் ஒருவரை இடைநிறுத்த மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டமே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சில் இரு தரப்பினருக்கும் நீண்டநேரம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து அனைத்து தரப்பினருக்கும் நன்மைபயக்கும் வகையில் தீர்மானம் எட்டப்பட்டமையினால் போராட்டம் சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

ரயில்சேவை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதால் அனைவரும் உடனடியாக வேலைக்கு திரும்பவேண்டும். சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் குறைப்பாடுகளை காரணமாக பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எனவே சட்டங்களில் மாற்றங்கள் செய்யவேண்டியுள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இது எவ்வாறு இருப்பினும் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை நம்பி ரயில் நிலையங்களுக்கு சென்ற பொதுமக்கள் ரயில்கள் சேவையில் ஈடுபடாமையினால் நேற்று பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியமை குறிப்பிடத்தக்கது.

இ​தேவேளை, இன்று (05) காலை சேவையில் ஈடுபடவிருந்த 04 புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

புகையிரத ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க தவறியதால் குறித்த புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து ரம்புக்கணை நோக்கி பயணிக்கவிருந்த புகையிரத சேவையும், கொழும்பிலிருந்து வியாங்கொடை நோக்கி பயணிக்கவிருந்த புகையிரத சேவையும் இன்று காலை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்தது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435