சுமார் 16, 000 அரச தனியார் ஊழியர்கள் ஆசனப்பதிவு – ரயில் திணைக்களம்

சுமார் 16,000 அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பிற மாகாணங்களில் இருந்து கொழும்பு வருவதற்காக ஆசனங்களை பதிவு செய்துள்ளனர் என்று புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய நாளை (26) தொடக்கம் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை பிற மாகாணங்களில் இருந்த 27 ரயில்கள் கொழும்புக்கு பயணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று ரயில் திணைக்கள பொது முகாமையாளர் (வணிகம்_) வி.எஸ் பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.

இது தவிர நாளை (26) கொழும்பு மற்றும் பெலியத்த ஆகிய பிரதேசங்களில் இருந்து இரு நகரங்களுக்கிடையிலான ரயில்கள் சேவையில் ஈடுபடும்.

மேலும், பெலியத்த, காலி, மொரட்டுவ ஆகிய பிரதேசங்களில் இருந்து தலா ஒரு ரயிலும் களுத்துறை, பானதுறை ஆகிய பிரதேசங்களில் இருந்த தலா இரு ரயில்களும் சிலாபம், நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களில் இருந்து தலா ஒரு ரயிலும் அவிஸ்ஸாவலை, கொஸ்கம, பாதுக்க, ஹோமாகம மற்றும் கொட்டாவ ஆகிய பிரதேசங்களில் இருந்து தலா ஒரு ரயிலும் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

ரயில் ஆசனங்களை பதிவு செய்த அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் தவிர சேவை அடையாள அட்டை வைத்திருக்கும் ஊழியர்களுக்கான குறிப்பிட்ட அளவு ஆசனஙகளை ஒதுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வூழியர்கள் தமது சேவை அடையாள அட்டையை விமான நிலைய அதிகாரிகளுக்க சமர்ப்பித்து ரயிலில் பயணிப்பதற்கான வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும். ஆசனங்களை பதிவு செய்யாத ஊழியர்கள் ரயில் நிலையத்திற்கு வருகைத்தரும் ஒழுங்குக்கமைய ஆசனங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் வி.எஸ் பொல்வத்தகே சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435