சுங்கப் பணியாளர்கள் போராட்டம்: 75% பணிகள் முடக்கம்: 3 பில்லியன் வரை நட்டம்

சுங்கப் பணியாளர்கள் இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக இறக்குமதி மற்றும் விசாரணைப் பிரிவுகளின் 75 சதவீத பணிகள் ஸ்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களுக்கான வரி விதிப்பனவுகள் ஊடாக கிடைக்கப்பெறுகின்ற நாளாந்த வருவாயில் 3 பில்லியன் ரூபாய் தொடக்கம் 4 பில்லியன் ரூபாய் வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சுங்கப் பணிப்பாளர் பதவியில் இருந்து பி.எஸ்.எம். சார்ள்ஸை நீக்கி, அவருக்கு பதிலாக கடற்படையின் ஓய்வுப்பெற்ற அதிகாரி ஒருவரை அந்த பதவியில் அமர்த்த எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சங்க பணியாளர்கள் ஆரம்பித்துள்ள போராட்டம் இன்று இரண்டாம் நாளாகவும் தொடர்கிறது.

இந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுக பயணிகள் சேவை மற்றும் ஏற்றுமதி பிரிவு என்பவற்றின் பணிகள் வழமைப்போல இடம்பெற்று வருகின்றன.

ஆனால் இந்த பிரச்சினைக்கு விரைவாக தீர்வு வழங்கப்படாத பட்சத்தில், இந்த பிரிவுகளும் அடையாள பணிப்புறக்கணிப்பை நடத்தவிருப்பதாக, சுங்க தொழிற்சங்க சங்கம் தெரிவித்துள்ளது.

பீ.எஸ்.எம். சார்ள்ஸ் சுங்கத் திணைக்கள பணிப்பாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டிருப்பதாக தெரிவித்து, நேற்றையதினம் பிற்பகல் 3.00 மணி முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

நிர்வாக சேவை அல்லது சுங்க சேவை அதிகாரி ஒருவரை பணிப்பாளராக நியமிப்பதே சாதாரண முறைமை என்றாலும், ஓய்வுப்பெற்ற கடற்படை அதிகாரி ஒருவரை இந்த பதவிக்கு நியமிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சுங்கப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435