சுகாதார சேவையாளர் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பு

நாடளாவியரீதியில் உள்ள சகல மருத்துவமனைகளிலும் இன்று (10) காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 4மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சுகாதார சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
10 கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
சேவையாளர் தட்டுப்பாடு, இடமாற்றம், பதவி உயர்வுக்கேற்ற கொடுப்பனவு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த பணிப்புறக்கணிப்பின் போது, கொழும்பு தேசிய மருத்துவமனை, களுபோவில போதனா மருத்துவமனை, கராபிட்டிய போதனா மருத்துவமனை, கண்டி பொது மருத்துவமனை உள்ளடங்கலாக 30 மருத்துவமனைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை நடாத்த திட்டமிட்டுள்ளதாக அகில இலங்கை சுகாதார சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435