சுகாதார சேவைகள் சங்க போராட்ட தீர்மானம் தற்காலிகமாக நிறுத்தம்!

அகில இலங்கை சுகாதார சேவைகள் சங்கம் மேற்கொள்ளவிருந்த இரு நாள் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளரின் வேண்டுகோளுக்கமைய இவ்வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

பத்து அம்ச கோரிக்கையை முன்வைத்து இன்றும் (04) நாளையும் (05) வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள அகில இலங்கை சுகாதார சேவைகள் சங்கத்துடன் மேலும் 84 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுமார் 60,000 அங்கத்தவர்கள் இப்போராட்டத்தில் கலந்துகொள்ளவிருந்தநிலையில் அமைச்சின் செயலாளரின் கோரிக்கைக்கமைய இப்போராட்டம் கைவிடப்பட்டது என சங்கத்தின் பேச்சாளர் மஹிந்த குருகே தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் சுகாதார சேவைகள் அமைச்சருக்கு கடந்த 2018ம் ஆண்டு தௌிவுபடுத்தினோம். எனினும் அதற்கு உரிய பதில் இதுவரையில் கிடைக்கவில்லை. எனவே கடந்த மாதம் 10ம் திகதி நாடு தழுவிய போராட்டமொன்றை மேற்கொண்டோம். அதில் சுமார் 50,000 பேர் கலந்துகொண்டனர். அதன் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு போராட்டத்தை மேற்கொள்ள முயற்சித்த போதிலும் அமைச்சின் செயலாளர் கேட்டுக்கொண்டதற்கமைய அத்தீர்மானம் பிற்போடப்பட்டது என்று மஹிந்த குருகே தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435