சுகாதார அமைச்சை எச்சரிக்கும் அகில இலங்கை தாதியர் சங்கம்

கொவிட் 19 தொற்று பரவி வரும் இக்காலப்பகுதியில் தொடர்ந்து சேவை புரிந்து வரும் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடின் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என அகில இலங்கை தாதியர், சங்கம் சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சின் செயலாளருக்குகொ அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பிரதான செயலாளர் எஸ்.பி மெதிவத்தவுடைய கையெழுத்துடன் 23.09.2020 திகதியிட்டு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொவிட் 19 வைரஸ் தொற்று பரவி வரும் இக்காலப்பகுதியில் சேவை வழங்கும் தாதியருக்கு கொவிட் 19 விசேட விடுமுறை, ​மேலதிக சேவை, பொது விடுமுறை நாள் கொடுப்பனவு மற்றும் வேலைநாள் கொடுப்பனவு மற்றும் தாதியர் எதிர்நோக்கும் போக்குவரத்து பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எமது சங்கம் உங்களுக்கும் சுகாதார அமைச்சருக்கும் கடிதம் மூலமாக தெரியப்படுத்தியிருந்தோம். அக்கடிதங்களுக்கு இதுவரை எமக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இம்மாதம் 18ம் திகதி அனுப்பப்பட்ட கடிதத்திற்கமைய கண்டி பொது வைத்தியசாலை தாதியர்கள் இம்மாதம் 20ம் திகதி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தின் பின்னர் ஊரடங்கு அமுலில் இருக்கும் பிரதேசங்களில் பணியாற்றும் தாதியர்களுக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்து தருவதாக வைத்தியசாலை பிரதானிகளூடாக தெரியப்படுத்தியிருந்தீர்கள். எனினும் பெரும்பாலான வைத்தியசாலைகளில் இன்னமும் அவ்வசதி வழங்கப்படவில்லை. அதேபோல், அரசாங்கம் தாதியர்களுக்கு வழங்கிய வழங்கிய கொவிட் விசேட விடுமுறைகளில் இருந்த ஞாயிறு மற்றும் பொது விடுமுறை தினங்களுக்கான கொடுப்பனவுகள் வழங்குவது தொடர்பிலான பிரச்சிகைளுக்கு இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. இதனால் தாதியர்கள் பாரிய சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

மத்திய மற்றும் மாகாண அதிகாரிகள் கொடுப்பனவு வழங்கும் விடயத்தில் தமது விருப்பதிற்கமைய செயற்படுவதனால் தாதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள வழிகாட்டி மற்றும் சுற்றுநிருபங்களுக்கமைய செயற்படாமையினால் எதிர்காலத்தில் அமைச்சின் சுற்றுநிருபத்திற்கமைய செயற்படுமாறு அறிவுறுத்தல்களை உரிய அதிகாரிகளுக்கு வழங்குமாறு கோருகிறோம்.

இப்பிரச்சினைகளை ஆராய்ந்து இதயபூர்வமாக சேவையாற்றி வரும் தாதியர்களின் கொடுப்பனவுகளை வழங்கி, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்குவதனூடாக செயற்றிறன் மிக்க சேவையை வழங்க அவசியமான சூழலை ஏற்படுத்தி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு இல்லாவிடின் பாதிக்கப்பட்ட தாதியர்களை ஒன்றிணைந்து விருப்பமின்றியேனும் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க நாம் பின்நிற்கப்போவதில்லை என்பதையும் தெரியப்படுத்திக்கொள்கிறோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435