சவுதி வீஸா கட்டணத்தில் மாற்றம்

உலகச்சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியினால் பாரிய பொருளாதார சிக்கலை எதிர்நோக்கியுள்ள சவுதி அரேபியா பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் ஒரு செயற்பாடாக தற்போது வீசா கட்டணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய வருமானமீட்டு பொருளாக காணப்பட்ட எண்ணெயின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் மாற்றுத்திட்டங்களை கையாளுவது தொடர்பில் கடந்த மாதம் இடம் பெற்ற அமைச்சரவை கூட்டத்தில தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் தற்போது வீசா கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.

அதற்கமைய இதுவரை 200 சவுதி ரியாலாக இருந்த வீசா கட்டணம் தற்போது 2000 சவுதி ரியாலாக உயர்த்தப்பட்டுள்ளது.

எனினும் உம்ரா மற்றும் புனித இடங்களை பார்வையிடுவதற்காக முதற்தடவை சவுதி அரேபியாவிற்கு விஜயம் செய்பவர்களுக்கு இக்கட்டணம் விலக்கப்பட்டுள்ளது.

ஒரு தடவை விஜயம் செய்யும் வீஸாவுக்கே 2000 சவுதி ரியால் ஆகும். அவ்வீஸா 2 மாதங்களுக்கு செல்லுபடியாகும். அது தவிர மேலதிகமாக தங்கியிருக்கும் ஒவ்வொரு மாதத்திற்கும் 100 சவுதி ரியால் செலுத்தப்பட வேண்டும். பல தடவை பயன்படுத்தப்படும் வீஸாவுக்கான கட்டணம் தற்போது 500 சவுதி ரியால் என்றும் மூன்று மாதத்திற்கு செல்லுபடியாகவுள்ள அவ்வீஸாவுக்கான மேலதிக ஒவ்வொரு மாதத்திற்கும் 200 சவுதி ரியால் செலுத்தப்பட வேண்டும் என்றும் சவுதி கடவுச்சீட்டு பணிப்பாளர் நாயகம் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

வேலைத்தளம்/ கல்ப் நியுஸ்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435