சவுதி வீட்டுப் பணிப்பெண்களுக்கு விரைவில் காப்புறுதி?

சவுதி அரேபியாவில் தற்போது பணியாற்றும் ஆயிரக்கணக்கான வீட்டுப்பணிப்பெண்களுக்கு காப்புறுதி வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சவுதி அரேபிய தொழிலாளர் அமைச்சு, காப்புறுதி நிறுவனங்களில் பொதுச்சபை மற்றும் சவுதி அரேபிய நாணய நிதியம் என்பவற்றுக்கிடையில் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று காப்புறுதி நிறுவனங்களில் பொதுச்சபை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் வீட்டுப்பணிப்பெண்கள் எதிர்நோக்கும் ஆபத்துக்கள், விபத்துக்கள் என்பவற்றுக்கு ஏனைய நாடுகள் ஏற்படுத்தியுள்ள திட்டங்களை அனுபவமாக கொண்டு நாம் செயற்படவுள்ளோம். ஆபத்துக்களுக்கெதிராகவும் காப்புறுதி வழங்கப்படவுள்ளதுடன் மருத்துவ காப்புறுதியும் வழங்குவது தொடர்பில் ஆராயப்படுகிறது. சவுதி அரேபியாவில் தற்போது பணியாற்றும் பணிப்பெண்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு காணப்படும் ஆபத்துக்கள் விபத்துக்கள் என்பவற்றை கருத்திற் கொண்டு காப்புறு வழங்கப்படவுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, வழங்கப்படும் காப்புறுதியானது விபத்துக்கள், ஆபத்துக்களை கருத்திற்கொள்ளப்படவேண்டும். மேலும் எஜமானர்களின் தாக்குதலினால் பாதிக்கப்படல், நிரந்தர அங்கவீனமாகும் அபாயம், மூன்று மாத பயிற்சிக் காலப்பகுதியில் எந்த வித ஒப்பந்தமும் செய்யப்படாத நிலையில் வீட்டை விட்டு வெளியேறுதல், நாடுகடத்தப்படல் என்று அனைத்தையும் உள்வாங்கும் வகையில் காப்புறுதி அமைக்கப்படவவேண்டும் என்று அந்நாட்டு காப்புறுதிதுறை சிரேஷ்ட அதிகாரியொருவர் சுட்டிக்காட்டினார்.

இக்காப்புறுதிட்டமானது தாம் எங்கேயுள்ளோம். தமக்கு எந்த காப்புறுதி நன்மையை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை தெரிந்துக்கொள்ள வீட்டுப்பணிப்பெண்களுக்கு உதவும். மேலும் மேலும் வீட்டுப் பணிப்பெண்களை தருவிக்கும் அலுவலகங்கள், நிறுவனங்கள் இதில் நேரடியாக தொடர்புப்படுவதால் இடைத்தரகர்களினால் ஏற்படும் பிரச்சினைகளை வெகுவாக குறைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435