சவுதியில் போராட்டம் செய்யும் இலங்கையர்

எட்டு மாதங்கள் சம்பளம் வழங்காமல் வேலைவாங்கிய தொழிற்சாலைக்கு எதிராக போராட்டதில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களை சவுதிக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் அஸ்மி காஸிம் சந்தித்துள்ளார்.

சவுதி அல் கொபர்க்கி தொழிற்சாலையில் பணியாற்றிய 12 இலங்கை தொழிலாளர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தொழிலாளர்கள் சுமார் 3 மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் குறித்த 12 இலங்கையர் மட்டுமே போராட்டத்தை ஆரம்பித்தனர். தொடர்ந்து வேறு நாட்டினரும் இவ்வார்ப்பாட்டத்தில் பங்குபற்றினர்.

தமக்கு நீதி கேட்டு விரைவில் சட்ட உதவியை நாடவுள்ளதாகவும் நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435