சம்பளமின்றி நாடு திரும்பிய பெண்ணுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

சவுதி அரேபியாவில் பணிப்பெண்ணாக கடமையாற்றி சம்பளமெதுவுமின்றி நாடு திரும்பிய பெண்ணுக்கான பதின்மூன்றரை இலட்சம் ரூபா நிலுவை சம்பளம் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரளவினால் நேற்று (16) குறித்த பெண்ணுக்கு நிலுவைச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியாவைச் சேர்ந்த கோடிஸ்வரி செல்லமுத்து (35) என்ற குறித்த பெண் கடந்த 2003 ஆம் ஆண்டு போலி கடவுச்சீட்டு ஆவணங்களுடன் முஸ்லிம் பெண்போன்று சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளனர். அங்கு பணிக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டதாகவும் அதன்பின்னர் சம்பளமின்றி 12 ஆண்டுகள் வேலை செய்து வெறுங்கையுடன் கடந்த ஒக்டோபர் மாதம் நாடு திரும்பியுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தாயான கோடீஸ்வரி மருதானையிலுள்ள ஒரு முகவர் நிலையத்தினூடாகவே சவுதிக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக 1985ஆம் ஆண்டு தனது பாட்டியுடன் தமிழகத்திலுள்ள திருவண்ணாமலை முகாமில் தஞ்சம் புகுந்த கோடிஸ்வரி அங்கேயே திருமணம் செய்துள்ளார். இலங்கையிலுள்ள பெற்றோரை பார்க்க வந்த நேரமே போலி கடவுச்சீட்டு வீஸாவுடன் அவர் சவுதி சென்றுள்ளார். தற்போது இலங்கையில் யாரும் இல்லாத நிலையில் மீண்டும் கோடீஸ்வரி தமிழகத்திற்கு அனுப்பும் நடவடிக்கையை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435