சம்பளத்தில் குளறுபடி – தோட்டத் தொழிலாளர் சீற்றம்

நுவரெலியா மாவட்ட ராகலை பிரதேசத்தில் தோட்டத் தொழிலாளர்கள் தங்களுடைய நாட்சம்பளத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறி மீண்டும் திரும்பி அனுப்பியுள்ளனர்.

இராகாலை பிரதேசத்தில் மத்துரட்ட தனியார் துறைக்கு சொந்தமான இராகலை கொனிக்கா ​தோட்டத்தின் மேற்பிரிவு மற்றும் கீழ் பிரிவு ஆகிய தோட்டங்களிலேயே இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சுமார் 300இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சம்பளத்தை ஏற்றுக்கொள்ளாமல் திருப்பியனுப்பியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கொழுந்து பறிக்கும் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 18 கிலோ கொழுந்து பறித்தால் மட்டுமே முழுநாள் சம்பளம் வழங்கப்படுகிறது. ஒரு கிலோ குறைந்தாலும் அரைநாள் சம்பளம் மட்டுமே வழங்கப்படுகிறது என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தற்போது கொழுந்து மிகவும் குறைவான காலமாகும். எனவே 18 கிலோவுக்கு குறைவாக கொழுந்து பறிக்கப்பட்டதை காரணம் காட்டி தமது சம்பளம் குறைக்கப்பட்டு அநீதி இழைக்கப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இப்பிரச்சினை தொடர்பில் தோட்ட நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும் தோல்வியில் முடிவடைந்ததாகவும் மற்றுமொரு கலந்துரையாடல் எதிர்வரும் 15ஆம் திகதி நுவரெலியா உதவி ஆணையாளர் காரியாலயத்தில் நடைபெறவுள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435