சட்டவிரோதமாக வௌிநாடு செல்லவிருந்த 12 பேர் கைது

படகின் மூலம் வௌிநாடு செல்லும் நோக்கில் விடுதிகளில் தங்கியிருந்த 12 பேரை பொலிஸ் அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று (14) பகல் 12.30 மணிளவில் திஸ்ஸமாராம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னகமுவ மற்றும் அளுத்கொட ஆகிய பிரதேசங்களில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கியிருந்தோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சுற்றிவளைப்பின் ​போது 6 ஆண்களும் 3 பெண்களும் 4 பிள்ளைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்விடத்தில் இருந்து மருத்துவ உபகரணங்கள் மற்றும் இரத்த மாதிரி என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் திஸ்ஸமாராம பொலிஸில் ஒப்படைக்கப்பட்டு இன்று (15) திஸ்ஸ்மாராம நீதவான நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 4- 59 வயதுக்கிடைப்பட்டவர்கள் என்றும் நீர்கொழும்பு, சிலாபம், திஸ்ஸமாராம ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435