கொவிட் 19 எதிரொலி- ருமேனியாவில் வேலையிழந்த இலங்கையர்கள்

ருமேனியாவில் பணியாற்றும் 7 இலங்கையர்களுக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு பணியாற்றிய 37 ஊழியர்களை அத்தொழிற்சாலை பணிநீக்கம் செய்துள்ளது என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ருமேனியாவின் பொரோசனி நகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 7 இலங்கையர்களுக்கே கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்களில் செய்தி வௌியாகியுள்ளது.

இலங்கையர்களுக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்தது குறித்த தொழிற்சாலை நிர்வாகம் அங்கு பணியாற்றிய 37 இலங்கையர்களை பணிக்கு வருவதை தவிர்க்குமாறு கோரியுள்ளது. பின்னர் 44 இலங்கையர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

இவ்வாறு இலங்கையர்கள் பணிநீக்கம் செய்ததை தொடர்பில் தொழிலாளர் ஆய்வகம் விசாரணைகள் ஆரம்பித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகள் ஆரம்பிக்ப்பட்டுள்ளன. ருமேனிய தொழிலாளர்களுக்குள்ள அதே உரிமைகளை அனுபவிக்கு உரிமை இலங்கையர்களுக்கும் உண்டு என அவ்வாய்வகம் சுட்டிக்காட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435