கொழும்பில் எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனை

கொழும்பின் சில பகுதிகளில் இன்றைய தினம் பலருக்கு எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுறுதியானர்களுடன் தொடர்பை பேணியதாக அடையாளம் காணப்பட்ட பலருக்கு இவ்வாறு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கொழும்பு மாநாகர சபையின் தொற்று நோயியல் வைத்தியர் தினுகா குருகே ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, மாளிகாவத்தை, மருதானை, ஆட்டுப்பட்டித்தெரு, கொழும்பு – கோட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் எழுமாறாக தெரிவுசெய்யப்பட்ட பலருக்கு காக்கைத்தீவு – 5 ஆம் ஒழுங்கையில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435