குவைத்திலிருந்து நாடு திரும்பிய இலங்கைப் பெண்கள்

வீட்டுப்பணிப்பெண்களாக பணியாற்ற குவைத் சென்று பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த 57 இலங்கையர்கள் இன்று (29) நாடு திரும்பினர்.

குவைத்தில் தாம் பணியாற்றிய வீடுகளில் எஜமானர்களினால் பல்வேறு கொடுமைகளுக்குள்ளான இப்பெண்கள் பணிபுரிந்த வீடுகளில் இருந்து தப்பிச் செல்லும் போது அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தூதரகத்தினூடாக ‘சுரக்‌ஷா’ பாதுகாப்பு மத்தியநிலையத்திடம் கையளிக்கப்பட்ட சிலர் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதுடன் இன்னும் சிலர் அந்நாட்டில் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்டு நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் பல பாகங்களைச் சேர்ந்த குறித்த பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அலுவலகத்தில் வழங்கப்பட்ட போக்குவரத்து கொடுப்பனவைப் பெற்றுக்கொண்டு தத்தமது வீடுகளுக்குச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435