குவைத்திலிருந்து நாடுதிரும்பிய 28 பேருக்கு கொரோனா

இன்று நாட்டில் இதுவரையில் 28 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் குவைத்திலிருந்து நாடுதிரும்பியவர்கள் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்களுள் 5 பேர் திருகோணமலை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தட்டிருந்தவர்களாவர்.

ஏனைய 23 பேர் மின்னேரியா தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுப்பட்டிருந்தவர்கள் என அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதி வரையில் ஆயிரத்து 118 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களுள் 674 பேர் குணமடைந்துள்ளனர்.

435 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435