கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகத்தேர்வு

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகப் பரீட்சை இம்மாதம் 20 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை திருகோணமலை உட்துறைமுக வீதியிலுள்ள கிழக்கு மாகாண பேரவை செயலக கட்டிடத்தில் நடைபெறவுள்ளதாக, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ. முத்துபண்டா தெரிவித்தார்.

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரிய சேவையின் 3 ஆம் வகுப்பின் II ஆம் தரத்திற்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அத்தோடு, நேர்முகப் பரீட்சை தொடர்பான கடிதங்கள் சம்பந்தப்பட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை http://www.ep.gov.lk/en/minieducationindex எனும் இணையதளத்தினூடாக பார்வையிட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

நன்றி- தினகரன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435