கிழக்கு பட்டதாரிகள் ஆயிரம் பேருக்கு அரச நியமனங்கள்!

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் போது அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை முற்றாக மறுத்த கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகல்லாகம, நீதியான முறையிலேயே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் 4 மாதங்களுக்குள் 2ஆயிரம் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதோடு மேலும் ஆயிரம் ஆசிரியர் நியமனங்கள் விரைவில் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தினகரன் வாரமஞ்சரிக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவருடனான முழுமையான நேர்காணல் வருமாறு,

கிழக்கு மாகாண ஆளுனராக பொறுப்பேற்கும் போதும் கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை இருந்தது. அது நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் இருந்த ஒரு பிரச்சினை. நாங்கள் அநீதியாகவோ – நீதியாகவோ நடந்து கொண்டுள்ளோம் என்று கூறுவதற்கு முன்னர் எம்மால் எத்தனை ஆசிரியர் நியமனங்களை வழங்க முடியும் என்பதை பார்க்க வேண்டும்.

கிழக்கில் வேலையற்ற பட்டதாரிகள் சுமார் ஆறாயிரம் பேர் அளவில் இருந்தனர். நான் ஆளுனராக பதவியேற்ற பின்னர் அதில் 2000 க்கும் அதிகமானவர்களுக்கு அரச வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்துள்ளேன்.

சகல பட்டதாரிகளுக்கும் அரச வேலைவாய்ப்புக்களை வழங்க வேண்டும் என்பதே ஜனாதிபதியின் பணிப்புரையாகும். அதனை கருத்தில் கொண்டு அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். எதிர்வரும் ஒரிரு மாதங்களில் மேலும் ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கவும் தீர்மானித்துள்ளோம்.

ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் போது நியமனம் பெற்றுக்கொள்ளும் தரப்புக்கு நீதியாகவும் நியமனம் பெற்றுக்கொள்ளாத தரப்பு அநீதியாகவும் நடத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது நியாயமான கருத்து. எது எவ்வாறாயினும், தொழில் வெற்றிடங்களை நிரப்புவதே எமது நோக்கம். எக்காரணம் கொண்டும் அநீதி ஏற்படுவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். அதிகாரிகள் நடுநிலையாகச் செயற்பட நான் பணிப்புரை வழங்கியுள்ளேன்.

நன்றி- தினகரன் வாரமஞ்சரி

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435