கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக, கல்வி அமைச்சரினால் வெளியிடப்பட்ட விசேட சுற்றறிக்கை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பாடசாலைகளின் பாதுகாப்பு குறித்து கல்வி அமைச்சரினால், முன்னதாக ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்த நிலையில், 25/2019 என்ற விசேட சுற்றறிக்கை, நாட்டிள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு குழுவை நிறுவுதல், பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆகியோரை தெளிவுபடுத்தல் என்பன குறித்து இந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலைகளின் நுழைவாயில் பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், மாணவர்களின் பாடசாலையை பையை சோதனைக்கு உட்படுத்துதல் மற்றும் அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துதல், விடுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட 18 விடயங்கள் இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாடசாலைகளின் பாதுகாப்பு குறித்து கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

குறித்த சுற்றறிக்கையில், மாணவர்களின் பாதுகாப்பிற்கான பொறுப்பை அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை தரப்பினர் ஏற்றுக்கொள்ள எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சரத்தை நீக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளரிடம் எழுத்துமூலம் கோரப்பட்டுள்ளது.

எனினும், அதில் மாற்றங்களை ஏற்படுத்த இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.

எவ்வாறிருப்பினும், எதிர்வரும் 6ஆம் திகதி இரண்டாம் தவணைக்கான பாடசாலை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது

இதற்கமைய நாட்டில் உள்ள பெரும்பாலான பாடசாலைகள் நேற்றைய தினம் இராணுவத்தினரின் ஊடாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டுகின்றன.

பாதுகாப்புச் சபை, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை என்பன கலந்துரையாடி, பாதுகாப்பை உறுதிப்படுத்தியதன் பின்னரே எதிர்வரும் 6ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435