கல்வித்துறை வீழ்ச்சிக்கு காரணமாகும் மாகாணசபைகள்

கல்வித்துறைக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களை சேவையில் இணைக்க முயற்சிக்கும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மாகாண நிருவாகத்தில் உள்ள குழறுபடிகள் காரணமாக பாரிய சிக்கல்கள் ஏற்படுகின்றன என்று கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

2018 மே மாதம் 26ம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலிலுக்கமைய மாணவ ஆலோசகர்களை கல்விச்சேவையில் இணைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்த மக்கள் விடுதலை முன்னனி பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் உளவியல் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வை பெற்றுகொடுத்து அவர்களை வலுவூட்டும் நோக்கில் உளவியல் ஆலோசனை தகைமை பெற்ற சுமார் 3000 பேரை சேவையில் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதற்கான பரீட்சைகள் நடாத்தப்பட்டுள்ளது எனினும் மாகாணங்களிலுள்ள வெற்றிடங்கள் தொடர்பில் சரியான தகவல்கள் வழங்கப்படாமயின் காரணமாக சேவையில் இணைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்று இதன்போது அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்பாக, மாகாணசபைகள் துறைக்கு சம்பந்தமில்லாத பட்டதாரிகளை சேவையில் இணைப்பதனால் கல்வியின் தரம் குறைந்துள்ளது. உரிய பயிற்சிகளுடன் கூடியவர்களை கல்வித்துறையில் இணைத்துக்கொள்வதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435