கனடாவில் தொழில்வாய்ப்பு- மோசடி நபர் கைது!

கனடாவில் தொழில்வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடி செய்த பெண்ணை இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவு கைது செய்துள்ளது.

கனடாவில் தொழில்வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்த 5 பேரிடம் 32 இலட்சம் ரூபா பெற்றுக்கொண்டு, வாய்ப்பினை பெற்றுக்கொடுக்காத காரணத்தினால் பணியகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலொன்னா, விஜய வீதி, இல 23 என்ற முகவரியைச் சேர்ந்த பி.கே. ரேணுக்கா ஹர்ஷனி என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை பிரதேத்தில் ரேணுக்கா என்டர்பிரைஸஸ் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட தொழில் வழங்கல் நிறுவனமொன்றை இயக்கி வந்துள்ளார் என்று மேலதிக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் அனுமதிபத்திரம் முடக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட பெறப்பட்ட தகவல்களுக்கமைய அவருடைய வியாபாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அவருடைய கணவர் ஆர்.ஏ.டிரான் சதுரங்க ரணவீர என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்ததேகநபர் அம்பாறை தொழிலாளர் தீர்ப்பாயத்தில் நிறுத்தப்பட்டு நீதவான் உத்தரவுக்கமைய எதிர்வரும் 23ம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பணியகத்தின் விசேட விசாரணை பிரிவின் முகாமைத்துவ உதவி பொலிஸ் அதிகாரி அசோக்க குணசேக்கரவின் ஆலோசனைக்கமைய, பிரதான பொலிஸ் பரிசோதகர் அதுல பெரேரா, பொலிஸ் பரிசோதகர் புஸ்பகுமார ஆகியோர் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி- அத

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435