கனடாவில் தொழில்வாய்ப்பு: பணமோசடியிலர் ஈடுபட்ட பெண் கைது

தொழில்வாய்ப்புக்காக கனடா அனுப்புவதாக கூறி பாரிய அளவில் நிதி மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பெண் நேற்றிரவு நவகமுவ – ரனால பகுதியில் வைத்து குற்றத்தடுப்பு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்துக்குரிய பெண் உடற்பயிற்சி ஆலோசகராக செயற்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளார்.
கைதான குறித்த பெண்ணிடம் இருந்து 350 கிராம் எடையுடைய தங்கம், 72 போலி வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள், 50 வங்கி கணக்கு புத்தகங்கள், 50 கடனட்டைகள் என்பன காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435