கட்டாரில் திறந்த வெளியில் 3.30 மணிநேரம் பணிக்கு அமர்த்த தடை

கட்டாரில் தற்போது கடுமையான வெயிலுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது. அதனால் பொது வெளியில் பணிபுரிபவர்களுக்கான பணி நேரக்கட்டுப்பாடுகள் கடந்த ஜுன் 15ம் திகதி முதல் அமுலுக்கு வந்தன. அதன் படி திறந்த வெளியில் நண்பகல் 11.30 முதல் மதியம் 3.00 வரை பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த விதிகளைப்பின்பற்றாத 84 நிறுவனங்களின் வேலைத்தளங்களை நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சு 3 நாட்களுக்கு மூடியுள்ளது. அமைச்சின் அதிகாரிகள் மேற்கொண்ட கள விஜயத்தின் போது கண்டு பிடிக்கப்பட்ட நிறுவனங்களின் பணியிடங்களே இவ்வாறு இலுத்து மூடப்பட்டுள்ளன.
பணியாளர்களின் நலன் கருதி தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்தின் நடைமுறைகளைப் பின்பற்றி நடக்கும் படி நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இது போன்ற விதி மீறல்களில் நிறுவனங்கள் ஈடுபட்டால் 40280660 இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யும் படி அமைச்சு பணியாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம் : கத்தார் தமிழ்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435