கட்டாரில் இருந்து 268 இலங்கையர்கள் தாய்நாட்டிற்கு

கட்டாரில் பணியாற்றி 268 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் இன்று (27) இலங்கையை வந்தடைந்தனர்.

ஶ்ரீங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான யு.எல்- 218 இலக்க விமானத்தினூடாக இன்று காலை 5.45 மணிக்கு கட்டாரில் இருந்த பண்டாரநாயக்க விமான நிலையத்தை அப்பயணிகள் வந்தடைந்தனர்.

அழைத்து வரப்பட்ட பயணிகள் மற்றும் அவர்களுடை உடமைகள் விமான நிலையத்திற்குள் வரமுதல் தொற்றுநீக்கம் செய்யப்பட்டது.

தொடர்ந்து விமானநிலைய சுகாதார பிரிவு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளினால் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படுகின்றனவா என பரிசோதனை செய்யப்பட்டது.

அதனையடுத்து அனைத்து பயணிகளும் தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435