குவைத்தில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரத்தின் அறிவித்தல்

கடவுச்சீட்டின்றி இருக்கும் இலங்கையர்கள் தம்மைப் பதிவு செய்ய 2020/07/25 ம் திகதிக்கு முன்னர் நேரமொன்றை ஒதுக்கிக் கொள்ளுமாறு குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்தல் விடுத்துள்ளது.

இது தொடர்பாக தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடவுச்சீட்டின்றி இருக்கும் இலங்கையர்கள் தம்மைப் பதிவு செய்ய நேரமொன்றை ஒதுக்கிக் கொள்ள தொலைபேசி வாயிலாக நேரமொன்றை ஒதுக்கிக் கொள்ளும் வேலைத்திட்டம் கடந்த 2020 ஜூலை 10ம் திகதி முதல் நடைபெற்று வருகிறது. தொலைபேசி வாயிலாக நேரமொன்றை ஒதுக்கிக் கொள்ளும் வேலைத்திட்டம் எதிர்வரும் 2020 ஜூலை 25ம் திகதி சனிக்கிழமை மாலை 04.00 மணியோடு நிறைவு பெறவுள்ளது என்பதனை அறியத் தருகிறோம்.

எனவே தற்போது வரை தம்மைப் பதிவு செய்ய நேரமொன்றை ஒதுக்கிக் கொள்ளாத இலங்கையர்கள் எதிர்வரும் நாட்களில் காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணிக்குள் கீழ்வரும் இலக்கங்களின் வாயிலாக தொடர்பு கொண்டு நேரமொன்றை ஒதுக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

• 65616823
• 65619836

இந்த பதிவு நடவடிக்கைகளின் முதல் கட்ட நடவடிக்கைகளில் கலந்து கொள்ள முடியாமல் போன கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முழுமையாக முடக்கப்பட்டுள்ள (Lock down area) பர்வானியா பிரதேசத்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அப்பகுதி திறக்கப்பட்டதன் பின்னர் இரண்டாம் கட்ட பதிவு நடவடிக்கைகளின் போது சந்தர்ப்பமளிக்கப்படும் என்பதனையும் அறியத் தருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435