கடந்த 9 மாதங்களில் வௌிநாட்டில் பணியாற்றி 334 இலங்கையர் மரணம்

கடந்த 9 மாதங்களில் மட்டும் வௌிநாடுகளில் பணியாற்றும் 334 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர் என்று வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பான அறிக்கை நேற்று (04) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

229 ஆண்களும் 105 பெண்களுமாக 334 பேர் கடந்த 9 மாதங்களில் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 52 பேர் காணாமல் போயுள்ளனர். 22 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மேலும் 9 பேர் தாக்குதல்களுக்குள்ளாகியும் 247 பேர் சுகயீனமுற்றும் உயிரிழந்துள்ளனர் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களுடைய இறப்பை உறுதிபடுத்துவதுடன் உரிய பிரிவினூடாக குடும்பத்தினருக்கு நட்டஈடு வழங்கவும் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435