ஓய்வூதியத்தை நவீனமயப்படுத்த பொருளாதார வளர்ச்சி அவசியம்

நாட்டின் பொருளாதாரம் 7.5 வீதம் வளர்ச்சியடைந்தால் ஓய்வூதியத்திட்டத்தை மேலும் நவீன மயப்படுத்த முடியும் என்று பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்தார்.

தேசிய ஓய்வூதியத் தினத்தை முன்னிட்டு நேற்று (08) தாமரைத் தடாக அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.

ஓய்வு பெற்றோர் நாட்டுக்கு வழங்கியுள்ள அர்ப்பணிப்புடன் கூடிய சேவை விலைமதிப்பற்றது. அவர்களை கௌரவிக்கும் வகையிலேயே ஒக்டோபர் 08ம் திகதி ஓய்வூதியர் தினம் கொண்டாடப்படுகிறது.

நாட்டில் இடம்பெற்ற 30 வருடகால யுத்தம், 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி, 1977, 1988, 1989ம் ஆண்டுக்காலப்பகுதிகளில் இடம்பெற்ற கலவரங்கள் என்பவற்றின் போது தற்போது ஓய்வு நிலையில் உள்ள அதிகாரிகள் தமது பெறுமதி மிக்க சேவையை பொது மக்களுக்கு வழங்கியிருந்தனர். தமது உயிரையும் தியாகம் செய்திருந்திருந்தனர். அவர்களின் தன்னலமற்ற சேவைக்கு நன்றி கூற நாம் கடமைப்பட்டுள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435