ஓய்வுபெற்ற 25 இராணுவத்தினரின் ஓய்வூதியத்தில் மாற்றம்

ஓய்வு பெற்ற இராணுவத்தினர் 51000 பேரில் 25000 பேருடைய ஓய்வூதியத்தில் மட்டும் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

2019 வரவுசெலவு திட்டத்திற்கமைய அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினையை ஒப்பீட்டளவில் நோக்கி இவ்வதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓய்வூதியம் வழங்கப்படும் இன்றைய தினத்தில் (10) இவ்வதிகரிப்பு சேர்க்கப்பட்டுள்ளது என இராணுவ சம்பள மற்றும் பதிவுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் ஓய்வூதியம் பெறுவோரின் சம்பளத்தில் இருந்த பிரச்சினைகள் நோக்கப்பட்டு சுமார் 10,000 பேருடைய சம்பளத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று இராணுவ சம்பள மற்றும் பதிவுகள் அலுவலக பணிப்பாளர் பிரகேடியர் என் வேரகொட தெரிவித்துள்ளார்.

ஓய்வூதிய சுற்றுநிரூபம் இல 01/2019 திருத்தப்பட்ட (ii) மற்றும் 26.07.2919 ஆலோசனைக்கடிதத்துக்கு அமைய திருத்தப்பட்டு ஓய்வூதியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435