ஓமான் வாகன விபத்தில் 4 இலங்கையர் பலி!

ஓமானில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 இலங்கையர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் கடுமையான காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்றை சேர்ந்த தாயும் (40) 14, வயது மகள்மாரும் அவர்களுடன் சென்ற பொத்துவில்லைச் சேர்ந்த 6 வயது சிறுவனுமே இவ்வாகன விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

ஓமானில் கணக்காளராக பணியாற்றிய உயிரிழந்த பெண்ணின் கணவர் ஓமானின் மலைப்பாங்கான பிரதேசமான அல் ஜபல் அல் அஹ்தார் என்ற பிரதேசத்தில் உயர்ரக வாக ஓட்டிச் சென்ற வேலை வாகனம் கட்டுப்பாட்டை இழந்தமையினால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்தோரின் இறுதிக்கிரியைகள் அந்நாட்டிலேயே நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

டைம்ஸ் ஒப் ஓமான்/ வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435