ஓமானில் வௌிநாட்டுப் பணியாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி

ஓமானில் பணியாற்றும் வௌிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 3.5 வீததத்தால் குறைவடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

அந்நாட்டிலுள்ள வேலைவாய்ப்புக்களை உள்ளநாட்டவர்களுக்கு வழங்கும் நடவடிக்கையை அந்நாட்டு அரசாங்கம் ஆரம்பித்துள்ளமையும் வௌிநாட்டவர்கள் அதிகம் நாட்டுக்கு தொழில் நாடி வராமையும் இந்நிலைக்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

அந்நாட்டில் 1,787,447 ஆக இருந்த வௌிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை தற்போது கடந்த ஆண்டு டிசம்பம் மாதத்தில் 1,782,406 ஆக குறைவடைந்துள்ளது. ත.

கல்வியுட்பட ஏனைய துறைகளுக்கு வௌிநாட்டவர்கள் தொழில்நாடி வரும் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அந்நாட்டு திணைக்களம் ஒன்று தெரிவித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435