ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக்கு தடை விதிக்கும் துபாய் சர்வதேச விமானநிலையம்

ஒரு தடவை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவது எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் தடை செய்யப்படவுள்ளதாக டுபாய் சர்வதேச விமானநிலையம் அறிவித்துள்ளது.

துபாய் விமான நிலையமானது ஆண்டுக்கு 43,000 தொன் கடதாசி, கண்ணாடி மற்றும் ஏனைய கழிவுகள் மீள்சுழற்சி செய்கிறது. சூழல் மாசை கட்டுப்படுத்தும் கழிவுகளை மட்டுப்படுத்தும் நோக்கில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடம் மட்டும் ஒரு தடவை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 16 தொன் பிளாஸ்டிக் போத்தல்கள் மட்டும் மூடிகள் அழிக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு 90 மில்லியன் மக்கள் வந்து செல்லும் இடமாக துபாய் சர்வதேச விமான நிலையம் உள்ளது. மக்களிடையே நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நாம் நம்புகிறோம் என்கின்றனர் அதிகாரிகள்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435