ஒரு பெண் ஊழியர், அவர் மகப்பேற்று நிலை எய்தியிருந்தால்,

அவருக்கு மகப்பேற்றின் விளைவாக உயிருள்ள குழந்தை ஒன்று கிடைக்குமானால் அவரது மகப்பேற்று திகதியன்று தொடங்கி எழுபது (70) நாட்களுக்கு,

அத்துடன், மகப்பேற்றில் உயிருள்ள குழந்தை, கிடைக்கவில்லையாயின் அவரது மகப்பேற்று திகதியன்று தொடங்கி இருபத்தியெட்டு (28) நாட்களுக்கு, எனும் காலப்பகுதிக்கு விடுமுறை பெறுவதற்கு உரித்துடையவராதல் வேண்டும் என்பதுடன், தொழில்தருநர் அத்தகைய விடுமுறையை அனுமதித்தலும் வேண்டும்.

2018 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, கடை, அலுவலக ஊழியா (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) (திருத்தச் ) சட்டத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்களா?

ஏதேனும், கடை அல்லது காரியாலயத்தில் பெண் ஊழியர் ஒருவரின் தொழில் தருநர் ஒரு வயதிற்கு கீழ்ப்பட்ட குழுந்தை ஒன்றிற்கு அவள் தாய்ப்பால் ஊட்டுவதாயின், ஏதேனும் ஒன்பது மணித்தியால காலப்பகுதியில் அவள் தேவைப்படுத்தக் கூடியவாறான
அத்தகைய நேரங்களில் இரண்டு தாய்ப்பால் ஊட்டும் கால இடைவெளிகளை அவளுக்கு அனுமதித்தல் வேண்டும்.

ஒவ்வொரு கால இடைவெளியும், ஒரு குழந்தை பராமரிப்பு நிலையம் அல்லது வேறு பொருத்தமான இடம் அத்தகைய குழந்தைக்கு தாயப்பால் ஊட்டுவதற்காக அத்தகைய பெண் ஊழியருக்கு அத்தகைய தொழில்தருநரால் வழங்கப்பட்டிருக்குமிடத்து, முப்பது (30) நிமிடங்களுக்குக்குறையாமல் இருத்தல் வேண்டும் என்பதுடன், குழந்தைப் பராமரிப்பு நிலையம் அல்லது வேறு பொருத்தமான இடம் எதுவும் அவ்வாறு வழங்கப்பட்டிருக்காவிடத்து, ஒருமணித்தியாலத்திற்கு குறையாமல் இருத்தல் வேண்டும்.

அத்துடன், ஏதேனும் எழுத்திலான சட்டத்தின் கீழ் உணவுக்காக அல்லது ஓய்விற்காக அத்தகைய பெண் ஊழியருக்கு வழங்கப்பட்ட கால இடைவெளிக்கு மேலதிகமாக இருத்தல் வேண்டும் என்பதுடன், அவளது தொழில் நோக்கங்களுக்காக, எந்த காலப்பகுதியின்போது அவள் அவளுடைய தொழிலில் தொழில் புரிந்துள்ளாளோ அநத காலப்பகுதியாக கருதப்படுதலும் வேணடும்.

2018 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) (திருத்தச் ) சட்டம் மின்னிதழ் (PDF) வடிவில் கீழே உள்ள இணைப்பில்….

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435