ஒரு குடும்பத்துக்கு மாதாந்தம் 50,000 தேவை: தோட்டத்தொழிலாளர்களின் நிலை?

ஆட்சிக்கு வந்ததும் தோட்டத் தொழிலாளர்களை முழுமையாக பொறுப்பேற்கத் தயாரென ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ​தெரிவித்தார்.

இதுவரை காலமும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டதிலும் பார்க்க அதிகூடிய சேவைகளையும் சலுகைகளையும் அவர்களுக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பசறையில் இடம்பெற்ற பொதுமக்களுடனான சந்திப்பில் உரையாற்றும்போதே ஐ.தே.மு ஜனாதிபதி வேட்பாளர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, –

பதுளை மாவட்டத்தில் 50 சதவீதத்திலும் அதிகமானோர் தோட்டத்தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இப்பிரதேசத்திலுள்ள மக்களுக்கு எனது தந்தை மிகப்பெரிய சேவையை பெற்றுக் கொடுத்தார். அவர் வழங்கியதிலும் பார்க்க அதிகூடிய சேவையை நான் தோட்டத் தொழிலாளர்களுக்காக பெற்றுத் தருவேன்.

பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் மிகவும் துன்பகரமான வாழ்க்கையை கொண்டுள்ளனர். பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ள இவர்களுடைய சம்பளத்தை நினைக்கும்போது எனக்கு வெட்கமாக உள்ளது.

நான்கு பேர் கொண்ட தோட்டத் தொழிலாளர் ஒருவருடைய குடும்பத்தை நடத்திச் செல்வதற்கு ரூபா 50 ஆயிரம் தொடக்கம் 55 ஆயிரம் வரை மாதாந்தச் செலவுக்குத் தேவையென புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.எனினும் தற்போது கிடைக்கும் குறைந்த சம்பளத்தைக் கொண்டு எவ்வாறு அவர்களால் குடும்பத்தை நடத்திச் செல்ல முடியும்?

நான் இந்நாட்டின் ஜனாதிபதியானால் தோட்டத் தொழிலாளிகளின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்வேன். அவர்களுக்குத் தேவையான அனைத்து விடயங்களையும் நிறைவேற்றித் தருவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

நன்றி – தினகரன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435