ஐம்பதாயிரம் கொடுப்பனவுடன் பட்டதாரிகளுக்கு பயிற்சி

ஆயிரம் பட்டதாரிகளுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கி அத்துறையில் தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொள்ளுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கம் வகையிலான திட்டமொன்று தயார்படுத்தப்பட்டுள்ளதாக டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.

தகவல்தொழில்நுட்பமல்லாத துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் அவர்கள் இப்பயிற்சிக்கு தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் பயிற்சிக்காலத்தில் 50,000 ரூபா கொடுப்பனவு வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் துறைசார் அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

வேலையில்லா பட்டதாரிகள் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் வகையில் இத்திட்டம் அமையும் என்று நம்பிக்கை வௌியிட்டுள்ள அமைச்சர், இத்திட்டத்திற்காக இம்முறை வரவுசெலவில் 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பயிற்சியின் பின்னர் அதிக தொகை சம்பளம் பெரும் வகையிலான தொழில்வாய்ப்பினை பயிற்சியாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார்.

இலங்கைக்கு அதிக வருமானம் பெற்றுக்கொடுக்கும் துறைகளில் நான்காம் இடத்தில் தகவல்தொழில்நுட்பத்துறை உள்ளது. அதனூடாக வருடாந்தம் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் நாட்டுக்கு கிடைக்கிறது. எதிர்வரும் 10 வருடங்களுக்குள் நாட்டுக்கு அதிக வருவாயை ஏற்படுத்திக்கொடுக்கும் துறையாக இத்துறை அமையும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நன்றி- லங்காதீப

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள் (1)

  1. Author says:

    வேளை அற்ற பட்டதாரிகளின் நிளைமை ஏன் இன்றுவரை வெரும் பேச்சலவிலேயே உள்ளன ஏன் இந்த நாட்டிலே கல்வி கற்பதும் பட்டம் எடுப்பதும் மீன்கடையில் மீன் விற்பதற்காகவா?பட்டம்பெற்றவர்கள் வீதிகளில் பேமன்ட் வியாபாரிகளாக,கோழி இறைச்சி கடைகளில் கூழிக்கு மாரடிக்கும் நிளை,கட்டிட தொழிலாலியாக என பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர் ஏன் இலங்கை கல்வி திட்டத்தை மாற்றி அமைத்து தற்போது பட்டதாரிகள் தெய்கின்ற தொழில்களை ஆய்வு செய்து பல்கலைகழகங்களில் கற்கை நெறிகள் ஆரம்பிக்கலாமே!இலங்கை நாட்டிலே பட்டம் பெற்ற பட்டதாரிகள் நாட்டின் வளர்சிக்கு தேவை அற்றவர்களா அப்படியானால் இலங்கையில் உள்ள அனைத்து பல்கலைகலகங்களையும் மூடவேண்டியதாக உள்ளது ஏன் தற்போது உள்ள அரசாங்கம் கஷ்டப்பட்டு படித்து பரீட்சை எழுதி தேர்வடைந்து எடுத்த பட்டத்தை வைத்து எத்தனை கலத்துக்கு அரசியல் படம் காட்டப்போரிங்கப்பா?
    2019/06/27ம் திகதியும் மான்பு மிகு பிரதமர் வாய் வீரன் நாட்டிலே வாழும் அனைவருக்கும் நியமனம் வழங்குவேன் என கூரி கரகோசம் பெற்று இருப்பாரே! நாட்டை ஆளும் அனைவரும் அறிவாளிகள் அல்ல அறிவாளிகள் அனைவரும் ஆட்சியாலர்களும் அல்ல.அரச தொழில் புரிபவர்கள் அனைவரும் பட்டதாரிகளும் அல்ல பட்டதாரிகள் அனைவரும் அரச தொழிளாலர்களும் அல்ல.இலங்கையை ஆளும் தரப்பினர் -வீழ்சியா ,உயர்வா என்பதை வருகின்ற தேர்தல்கள் பாடம் புகட்டும்....

    (1)(1)

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435