ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஊரடங்கு அறிவித்தல் தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இ்ன்று வெளியிட்ட அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மே 24, ஞாயிறு மற்றும் 25 திங்கள் ஆகிய இரு தினங்களும் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை 23, சனி இரவு 8.00 மணி முதல் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மே 26, செவ்வாய் அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்படும். இம்மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தினமும் இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த போதும் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் நாளைய தினமும் நடைமுறையில் இருக்கும் அதேநேரம் மே,26 செவ்வாய் முதல் முன்னர் போன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

முன்னர் வெளியிடப்பட்ட அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்ட ஊரடங்கு சட்டத்துடன் தொடர்புடைய நிபந்தனைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435